மாவட்ட வாரியாக ஒருவார நேரடி தையல் தொழில் பயிற்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட வாரியாக ஒரு வாரத்துக்கு நேரடி தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

 ஒரு வார தையல் பயிற்சி இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக வாரம் ஒரு முறை தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அத்துடன் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை அடிப்படையில் செய்கிறது. 

 அதன் அடிப்படையில் வரும் வாரங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு வார தையல் தொழில் பயிற்சி நேரடியாக நன்கு பயிற்சிபெற்ற பயிற்சியாளரால் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின் போது பிளவுஸ் மற்றும் சல்வார் தைப்பதற்கு முறையாக கற்றுத் தரப்படும். கண்டிப்பாக இதற்கு முன்பதிவு செய்து இருக்க வேண்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இந்த பயிற்சி பெற்ற பிறகு அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் மற்றும் அதை வணிக ரீதியாக செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி கடன் மற்றும் அரசு மானியமும் பெறவும் வழிகாட்டுதல் செய்யப்படும். பதிவு செய்ய வேண்டும் இந்த பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ளதால் 7871702700, 9361086551 என்ற எண்களுக்கு தங்கள் பெயர், ஊர், மாவட்டம், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு குறுந்தகவலாக மட்டுமே அனுப்பி பதிவு செய்ய வேண்டும். 

 அரசின் மீண்டும் மஞ்சப்பை எனும் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழலை மேம்படுத்த துணிப்பை புரட்சியை ஏற்படுத்தும் விதமாக துணிப்பை தேவைக்கேற்ப பெண்களின் மூலம் தைத்து தரப்படும். கடன் உதவி மற்றும் மானியம் பெற வழிகாட்டுதல் செய்யப்படும். மேலும் தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் வாங்கி விற்கும் பொருட்களை எங்களுடைய இணையதளத்தின் வாயிலாக உலகளாவிய சந்தை வழியாக விற்பதற்கு தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில் form.wewatn.com என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்

Post a Comment

أحدث أقدم

Search here!