பொதுத் தேர்வு வினாத்தாள் பள்ளிகளுக்கு விளக்கம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள், எந்த பாடத்திட்டத்தில் அமையும் என்பது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:

நடப்பு கல்வி ஆண்டின்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. 
மே மாதம் நடத்தப்பட உள்ள பொதுத் தேர்வு, இந்த பாடத் திட்டத்தின்படியே நடத்தப்படும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வின் வினாத்தாள்கள், குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படியே அமைக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த பாடத்திட்டத்தை, மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் நடத்தி முடிக்க, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கையுடன், தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் விபரங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Post a Comment

أحدث أقدم

Search here!