குமரி மாவட்ட மாணவ-மாணவிகள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 


கல்வி ஊக்கத்தொகை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் சட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு முறை ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. 


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒற்றை சாளர முறையில் தொழிற்கல்வி படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றவர்கள் நிதி உதவி பெற தகுதியானவர்கள் அல்ல. 


தமிழ்நாட்டை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
ஆவணங்கள் கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் இறந்த அரசு பணியாளர்களின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது. 


எனவே தகுதியான மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான வசிப்பிட சான்று (வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும்), வருமானச் சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வி தகுதி வருமான விவரங்கள் அடங்கிய விவர பட்டியல், ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான உத்தரவு, இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட்ட நகலுடன் தாங்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவன தலைவர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 


தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!