தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை - 600006 ந.க. எண். 050373 /டபிள்யு.3/இ3/2021 நாள்.13.05.2022 

பொருள்: 

பள்ளிக்கல்வித் துறை - மேல்நிலைக் கல்வி -2021-2022ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 5 மாத காலங்களுக்கு பெற்றோர் கழகம் மூலம் ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டு பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022க்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம் மற்றும் பணிபுரிபவர் விவரம் கோருதல் சார்பு,

பார்வை: 1. அரசாணை (1டி) எண். 226, பள்ளிக்கல்வித்(பக2(2) துறை, நாள். 24.11.2021. 2. பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண்.050373/டபிள்யு 3/இ3/2021, நாள். 29.09.2021, 30.11.2021, 01.02.2022 மற்றும் 27.04.2022 ஆகிய நாளிட்ட கடிதங்கள். 

பார்வையில் காண் அரசாணையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையில் 2021- 2022ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மாணவர்கள் கல்வி நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதியான நபர்களை ரூ.10,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பி கொள்ள அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு பார்வை 2-ல் உள்ள கடிதத்தின் படி 5 மாதங்களுக்கு தொகுப்பூதிய ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதில் 2021-2022 நிதியாண்டு 31-3-2022 வரை நிறைவுற்றதால் டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வழங்கப்பட்டது. தற்சமயம் (மார்ச்/ஏப்ரல் - 2022) இரண்டு மாதங்களுக்கு உரிய ஊதியம் பெறப்படாமல் நிலுவை உள்ள காரணத்தால் மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022ம் மாதத்திற்கு பெறப்படவேண்டிய நிலுவை ஊதிய விவரம் மற்றும் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.05.2022 மாலை 4:00 மணிக்குள் இவ்வாணையரக மின்னஞ்சல் முகவரிக்கு (drew3sec@gmail.com) அனுப்பிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஒம்./ மு.இராமசாமி இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி) பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இணைப்பு படிவம் -1 மற்றும் படிவம் -2







Post a Comment

أحدث أقدم

Search here!