11, 12-ம் வகுப்பை தொடர்ந்து, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது. இதில் டெய்லரிங், அழகுகலை நிபுணர், வேளாண் என்ஜினீயரிங், ஜெனரல் மெக்கானிசம், பேஷன் தொழில்நுட்பம் மற்றும் டிசைன் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்பட்டு வந்தன. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடத்திட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த பாடத்திட்டங்களை நடத்துவதற்கு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு இந்த ஆண்டு நிதியையும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. 9, 10-ம் வகுப்பை தவிர, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு நடத்தப்பட்டு வரும் தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் வழக்கம்போல் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم

Search here!