அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப் பணித்திட்டம்) செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்:01424/எம்/இ2/2019, நாள்:14.06.2022 பொருள்: பள்ளிக்கல்வி - அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2022-23 ஆம் கல்வி ஆண்டு-Science Centre, Mobile Science Lab, i Mobile, Lab on a Bike & Young Instructor Leader programs நேரடி வகுப்பு நடத்த - அனுமதி வழங்குதல்- சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட Agastya programs- களைப் புதுப்பித்தல் - புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய அறிவியல் வளாகம் அமைக்க அனுமதி வழங்குதல் - தொடர்பாக, பார்வை: 

தமிழ்நாடு, அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம், மண்டல மேலாளர், திரு.K.Topaz அவர்களின் கடிதம். நாள்: 09.06.2022. *** 

பார்வையில் கண்டுள்ள கடிதத்தின்படி, அகஸ்தியா எனும் பன்னாட்டு (Agastya International Foundation) தொண்டு நிறுவனம், இந்தியாவின் 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில், பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்திட பணியாற்றி வருவதாக தெரிவித்து, 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் Science Centre, Mobile Science Lab, I Mobile Lab, Lab on a Bike, Young Instructor Leader programs உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும் நேரடி வகுப்பின் மூலம் செயல்படுத்திடவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டங்களைப் புதுப்பித்தும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அறிவியல் வளாகம் அமைக்க அனுமதி வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே, 2022-23-ஆம் ஆண்டில், அகஸ்தியா எனும் பன்னாட்டு நிறுவனம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, Science Centre, Mobile Science Lab, I Mobile Lab, Lab on a Bike, Young Instructor Leader and Lab On a Tab உள்ளிட்டவற்றை கற்பிக்கவும் அவை சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் மேலும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Agastya International Foundation- நிறுவனத்தால், சென்ற ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் தொடர்ந்து புதுப்பித்து செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அறிவியல் வளாகம் அமைப்பதற்கான முயற்சிகளும் Agastya International Foundation- நிறுவனத்தால், எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பணிகளை விரைந்து முடித்து அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கும் பொருட்டு, அதற்குரிய அனுமதியும் வழங்கப்படுகிறது. 

எனவே மேற்கூறியவாறு அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இப்பணிகள் செயல்படுத்தப்பட்டதற்கான மாதாந்திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மின்னஞ்சல் மூலம் (msectndse@gmail.com) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பள்ளி மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையிலும். மாணாக்கர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எவ்விதத்திலும் பாதித்தல் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டும் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிடுமாறும் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 




இணைப்பு:-பார்வையில் காணும் கடிதம். ஆ 84416 இணை இயக்குநர், (நாட்டு நலப் பணித்திட்டம்) (பொ). பெறுநர் 14/6/22 
1. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள். 
2. திரு.மண்டல மேலாளர், அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம், தமிழ்நாடு.

Post a Comment

أحدث أقدم

Search here!