தமிழகத்தில் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூன்17) வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 6-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மொத்தம் 3,936 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

சென்னையில் 46,932 மாணவ, மாணவிகள் 217 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

விடைத்தாள்கள் திருத்தி மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.in.gov.in. www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!