ஜன்னல் பராமரிப்புக்கு... 

ஒவ்வொரு வீடும், இடமும் வெவ்வேறு தேவைகளை கொண்டது. யார் பயன்படுத்த போகிறார்களோ, அவரது விருப்பங்களை பொறுத்துதான் வீட்டை வடிவமைக்க வேண்டும். ஜன்னல்களை பொறுத்தவரை ஒளி வரும் திசை, வெளித்தோற்றம், ஆற்றல் சேமிப்பு, போக்குவரத்து, குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு எட்டாத உயரம் போன்றவை ஜன்னலை வடிவமைப்பதில் முக்கியமானவை. 
திரைச்சீலைகள் மற்றும் கண்ணாடிக்குள் ஒளிவிடாத திரையமைப்பு ஆகியவை பண்ணை வீடுகள் போன்றவற்றின் ஜன்னல்களுக்கு பொருத்தமாக இருக்கும். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களுக்கு ஈரடுக்கு ஜன்னல்கள் தேவைப்படும். அத்துடன் புறஊதாக் கதிரியக்கத்தைத் தடுத்து உஷ்ணத்தை குறைக்க, பூச்சுள்ள கண்ணாடி ஜன்னல்களையும் பயன்படுத்தலாம். 
ஒரு ஜன்னலை அலங்கரிப்பதன் வழியாக அந்த அறையின் தோற்றத்தையே மாற்றிவிடலாம். ஜன்னல் திரைகளை அறையின் கூரையைத் தொடுமாறு அமைத்து, தரைவரை தவழவிட்டால் பெரிய தோற்றம் கிடைக்கும். அதிகம் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல் சட்டங்களும், அடர்நிறம் கொண்ட ஜன்னல் சீலைகளும் அறையை இருட்டாக்கி, சிறியதாகவும் தோன்றவைக்கும். ஈரடுக்கு கண்ணாடி ஜன்னல் வடிவமைப்புகள் அறையின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்கும். அத்துடன் புறஊதாக் கதிரியக்கப் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். கண்ணாடி ஜன்னல்களில் டின்ட் பூசுவதால் திரைச்சீலைகள் சாயம் இழக்காமல் இருக்கும்.

Post a Comment

أحدث أقدم

Search here!