சோப்பு குமிழியில் கலவையான நிறங்கள் தோன்றுவது ஏன்? நிறமிகளின் வேதிப்பிணைப்புகளும் அதன் வடிவங்களும் வண்ணங்களை உருவாக்குகின்றன. இவற்றை நிறமிகளால் ஆன நிறங்கள் என்கிறார்கள். சோப்புக்குமிழியின் பரப்பில் வானவில், மழைநாளில் சாலையில் பெட்ரோல், டீசல் சிந்துவதால் உருவாகும் நிறங்கள் ஆகியவற்றை நாம் ஒருமுறையேனும் பார்த்திருப்போம். சோப்பு அதிகபட்சமாக ஒரே ஒரு நிறத்தைக் கொண்டிருக்கும். ஆனால், சோப்புக் குமிழியில் எப்படி அத்தனை நிறங்கள்? ஆனால், நிறமிகளே இல்லாமல் நிறங்கள் உருவாகும். 
இதற்கு குறுக்கீடு எனப்படும் ஒளியின் ஒரு பண்பைப் பற்றி நாம் பேசவேண்டியிருக்கிறது. ஒளி அலைகள் அகடுகளையும் முகடுகளையும் கொண்டவை. அலையில் பள்ளமான இடங்கள் அகடுகள் என்றும் மேடான இடங்கள் முகடுகள் என்றும் வழங்கப்படுகின்றன. 


ஒரு சோப்புக் குமிழி பல அடுக்குகளைக் கொண்டதாகும். அதிலிருந்து பிரதிபலித்துத் திரும்பும் அலைகள் தாறுமாறாக குறுக்கீடு செய்ய வானவில் போன்ற கலவையான நிறங்கள் தெரிகின்றன. இது மென்படலக் குறுக்கீடு என்று வழங்கப்படுகிறது. 
ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய படலங்களின் வடிவக் கட்டமைப்பை நுண்ணோக்கிகள் கொண்டுதான் பார்க்க முடியும். இந்த அமைப்புகளுக்குள் புகும் ஒளி அலைகள் ஒன்றோடொன்று மோதி குறுக்கீட்டுக்கு உள்ளாகும். அதன் விளைவாக சில நிறங்கள் அடங்கியும் சில நிறங்கள் அதீதமாகவும் வெளிப்படும். இவ்வாறான வடிவமைப்புகளால் உருவாகும் நிறங்கள், வடிவ நிறம் என்று அழைக்கப்படுகின்றன. மயில் தோகை, வண்ணத்துப் பூச்சியின் சிறகு, முத்துகளின் பளபளப்பு, தட்டான் - ஈக்களின் இறக்கைகள் போன்றவற்றில் தெரியும் நிறம் அனைத்துக்கும் அவற்றில் உள்ள நுண்ணிய தோல் போன்ற அமைப்புகளே காரணம்.

Post a Comment

أحدث أقدم

Search here!