PGTRB - தமிழ் வழிச் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு (Link) அறிவிப்பு - TRB பத்திரிக்கைச் செய்தி வெளியீடு!!!

👉TNSED School App New Update Available Version 0.0.39 - Direct Link
ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1நேரடி நியமனம் 2020-2021 2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1/கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. 18.08.2022 பத்திரிக்கைச் செய்தி தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். 
ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை (நிலை) எண். 82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை நாள் 16.08,2021-ல் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1-ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, 11-12ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, இளங்கலைப் பட்டத்தினை (UG Degrce) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, முதுகலைப் பட்டத்தினை (PG Degree) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று, கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை (B.Ed. Degree) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.P,Ed. Degree மற்றும் M.P.Ed., Degree) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்குரிய link முகவரி பின்னர் தெரிவிக்கப்படும் என பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

link தற்போது தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கீழ்க்கண்ட முகவரி தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகவரியில் https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/ விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை 26.08.2022 முதல் 30.08.2022 அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்திட தெரிவிக்கப்படுகிறது. நாள்: 26.08-2022 தலைவர்

Post a Comment

أحدث أقدم

Search here!