பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2223/C7/Jமேகு ஒபக:2022 நாள்: 09.2022 பொருள்: பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் சார்பு 

பார்வை: 

பள்ளிக்கல்வி ஆணையர். தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் இணை செயல்முறைகள். ந.க.எண். 2223/C7/பமேகு/ஒபக/2022 நாள்: 21.07.2022 

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஏப்ரல்-ஜுலை மாதங்களில் நடைப்பெற்று. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம். புதிய உறுப்பினர்களைக் கொண்டு. மாதந்தோறும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக்குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே. கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி. கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்வது அவசியம். எனவே அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள்: 

1. அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்/உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும். 

2. பள்ளியின் தலைமையாசிரியர். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்;உறுப்பினர்கள் தங்கள் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

3. கீழ்கண்ட கருத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசனைகளுக்காக சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

4. அ.இடைநிற்றல் ஆ. மாணவர் சேர்க்கை இ. கற்றல் கற்பித்தல் ஈ.பள்ளி உட்கட்டமைப்பு உ.மாணவர் பாதுகாப்பு அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இத்தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். 

5 கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும், மேலும் கிராமப் பஞ்சாயத்துக்கள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட முடியும். 

6. கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை/முடிவுகளை இம்மாதம் கடைசி வெள்ளிக் கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும். மேற்காணும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாநிலதிட்ட இயக்குநர் பெறுநர்: அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

Post a Comment

أحدث أقدم

Search here!