பள்ளிக் கல்வி - கல்விசாரா செயல்பாடுகள் - 2022-2023 -ம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண். 4015/ஆ7/ஓபக/2022 நாள் 10.10.2022 பொருள்:- 

பார்வை:- 

பள்ளிக் கல்வி - கல்விசாரா செயல்பாடுகள் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022 நாள் 22.08.2022. ** 

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2. அரசுநடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்துமாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கை தொடர்பாக, இம்மாதம் அக்டோபர் 13, 2022 அன்று "தி ரெட் பலூன்" திரைப்படம் திரையிடப்படும். இப்படம் பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாகும். படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!