4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - சமூக அறிவியல்   -3.  போக்குவரத்து - புத்தக  வினா - விடைகள் 

PREPARED BY THULIRKALVI TEAM 

சமூக அறிவியல்

இரண்டாம் பருவம் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 1. பின்வருவனவற்றில் நிலவழிப்போக்குவரத்திற்கு எது சிறந்த எடுத்துக்காட்டாகும். 

அ) மகிழுந்து ஆ) கப்பல் இ) சிறுவிமானம் ஈ) விமானம்

 விடை: அ) மகிழுந்து

2. முதல் இரும்புப்பாதை போடப்பட்ட ஆண்டு _____________ 

அ) 2019 ஆ) 1853 இ) 1947 ஈ) 1950 

விடை: ஆ) 1853 

 3. தங்க நாற்கரச் சாலையை இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று ____________ அ) சென்னை ஆ) கன்னியாகுமரி இ) மதுரை ஈ) திருச்சி 

விடை: அ) சென்னை

 4. ____________ பழமையான போக்குவரத்து முறையாகும். 

அ) கப்பல் ஆ) மிதிவண்டி இ) நடைப்பயணம் ஈ) மாட்டுவண்டி 

விடை: ஈ) மாட்டுவண்டி

 5. போக்குவரத்து முறைகள் ____________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6 

விடை: ஆ) 4 

 II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

 1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – பேருந்து 

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – சென்னை

 3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – திருச்சிராப்பள்ளி

 4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – 2015 

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – ஹிம்சாகர் விரைவு இரயில் 

விடை: 

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – திருச்சிராப்பள்ளி 

2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – பேருந்து 

3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – ஹிம்சாகர் விரைவு இரயில்

 4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – சென்னை 

5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2015 

 III. சரியா? தவறா ? 

 1. மக்களுக்கு போக்குவரத்து தேவையானது அல்ல. 

விடை: தவறு 

 2. துறைமுகங்கள் வர்த்தகத்திற்கு முக்கிய மையங்களாக உள்ளன. 

விடை: சரி 

  3. நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை.

 விடை: தவறு

  4. சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும்.

 விடை: தவறு 

 5. தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன. 

விடை: தவறு

 IV. குறுகிய விடையளி. 

1. போக்குவரத்து – வரையறு. 

விடை: போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு இடம்பெயர்தல் ஆகும். 

 2. பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பட்டியலிடுக. 

விடை:


 3. இரயில் போக்குவரத்து – விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளைக் கூறுக. 

விடை: இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்று 1856 இல் இராயபுரத்தில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய இரயில் இணைப்புகள்


 4. வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் யாவை?

 விடை: வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும். ஆகாய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன.

 5. போக்குவரத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை எழுதுக. 

விடை: 

  •  ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் விரைந்து செல்ல, போக்குவரத்து உதவுகிறது. 
  • ஓரிடத்தில் விளையும் பொருள்களை வேறிடத்திற்கு கொண்டு சேர்க்க இது உதவுகிறது. 
  • அவசர காலங்களில் மருந்துகள், உணவுகள், மீட்புக் குழுக்களை அனுப்பி வைக்க போக்குவரத்து உதவுகிறது. 

பக்கம் - 119

 1. இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது?

 விடை: தமிழ்நாடு. 

 2. தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக. 

விடை: எண்ணூர், சென்னை, தூத்துக்குடி. 

 3. கடல் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பைக் கையாளும் அரசு நிறுவனத்தின் பெயரைக் கூறுக. 

விடை: கப்பல் போக்குவரத்துக் கழகம்.

 பக்கம் 120

 விடையளிக்க முயற்சி செய்க. 

 1. விமானப் போக்குவரத்தில் எந்த வாகனம் குறுகிய தூரப் போக்குவரத்திற்கு உதவுகிறது? 

விடை: ஹெலிகாப்டர்.

  2. தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?

 விடை: நான்கு (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி).

PREPARED BY THULIRKALVI TEAM 

Post a Comment

أحدث أقدم

Search here!