பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண். 007579 / ஜெ2 / 2023, நாள்:13.04.2023 
பொருள் : 

தொடக்கக் கல்வி 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுவது - சார்பாக. 
இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல் இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள் படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 
இத்தகைய மகிழ்ச்சியான வகுப்பறை நிகழ்வினை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது. 
வகுப்பறைக் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கற்றல் நிலைக்கேற்ப மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத்திருவிழா, கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. 

Post a Comment

أحدث أقدم

Search here!