அனுப்புநர்: க.இளம்பகவத். இ.ஆ.ப, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்/ மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை 06. 
பொருள்: 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தமிழ்நாடு பார்வை: 

பெறுநர்: முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள், 

நக.எண்:1519/முகஉதி/ஒபக/2023, நாள்: 21.04.2023 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து வகை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல்-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக 

பார்வை: 
1. அரசாணை நிலை எண்: 43, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந 4 -1) துறை, நாள்: 27.07.2022 2. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் சார்ந்த திட்ட செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகள், நாள்: 27.08.2022. 3.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்:2223/C7/SMC/ஒபக/2022, நாள்:07.09.2022 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி. கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் கீழ்க்காணும் குறிக்கோள்களை அடையும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!