சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 0.30 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 

 0.30 சதவீதம் உயர்வு பல்வேறு சிறுமிசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு (காலாண்டு) ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. வட்டி விகிதம், 0.10 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் வைப்பு ஓராண்டு கால டெபாசிட்டுக்கான வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 

3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7.5 சதவீதமாகவும் நீடிக்கும். 5 ஆண்டுகால தொடர் வைப்புக்கான வட்டி விகிதம், 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்வ மகள் பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

அது 8 சதவீதமாக நீடிக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.2 சதவீதமாக நீடிக்கும். தேசிய சேமிப்பு திட்டம் (7.7 சதவீதம்), பொது வருங்கால வைப்பு நிதி (7.1 சதவீதம்), கிசான் விகாஸ் பத்திரம் (7.5 சதவீதம்) ஆகியவற்றுக்கான வட்டிவிகிதத்திலும் மாற்றம் இல்லை. சேமிப்பு டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!