மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியது - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 28 سبتمبر 2023

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியது

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியது 


மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டில் இருந்து காலாண்டு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 15-ந்தேதியும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான மாணவர்களுக்கு கடந்த 19-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 20-ந்தேதியும் தேர்வு தொடங்கியது. 

பொதுவினாத்தாள் நடைமுறையில் அனைவருக்கும் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்று இருக்கிறது. தேர்வு முடிந்த நிலையில், மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு விடுமுறை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி இருக்கின்றன. காலாண்டு விடுமுறை முடிந்து, 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி தொடங்குகிறது. 

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், அந்த மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையை நீட்டித்து, 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quarterly vacations have begun for schools under the state curriculum

A common question paper procedure has been introduced for all examinations including quarterly from the current year for the students studying from class 1 to plus-2 in schools under the state curriculum. Accordingly, for the students of Plus-1 and Plus-2 classes, the last 15th and 6th SSLC. The examination started on 19th for the students up to 1st and 20th for the students from 1st to 5th.

The exam schedule has been published for everyone in the general paper procedure and the exam has been completed yesterday. As the exams are over, the quarterly vacation for the students has started from today (Thursday). After the quarter vacation is over, the classes for the 2nd term will start on the 3rd of the next month (October).

It is noteworthy that the Department of School Education has already announced that the 1st to 5th class teachers in government and government-aided schools will be given training for the 2nd term, so the quarterly vacation will be extended only for those students and the classes for the 2nd term will start on the 9th (Monday).

ليست هناك تعليقات:

إرسال تعليق