எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு


முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன். வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவமாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும். 

2024-25ஆம் கல்வியாண்டில், EMIS தளத்தில் Focused Learners class VI to IX- என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment

أحدث أقدم

Search here!