பள்ளி உள்கட்டமைப்பு, கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தனிப்பட்ட எழுத்தர்களை (பெர்சனல் கிளார்க்) நியமிக்க தலைமை செயலாளர் கடந்த மாதம் வெளியிட்டு இருந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார். 
அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவர் என 38 மாவட்டங்களுக்கு தனிப்பட்ட எழுத்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த எழுத்தர்கள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு எழுப்பிய தீர்மானங்களை ஒருங்கிணைப்பதும், அதனை மாவட்ட அளவில் அனைத்து துறைகளுக்கும் தெரிவிப்பதும் இவர்களின் முக்கிய பொறுப்பாக இருக்கும் என்று கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது. 

அந்த வகையில் முக்கிய பணிகளை மேற்கொள்ள இருக்கும் எழுத்தர்களுக்கு வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுசீரமைப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم

Search here!